யாழிலிருந்து சட்டவிரோதமாக மதுபானத்தை கடத்திய ஒருவர் கைது
யாழ்.நகரிலிருந்து அரியாலை பிரதேசத்திற்கு முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமாக மதுபானத்தை கடத்திய ஒருவரை மாம்பழச் சந்தியில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 300 போத்தல்
மதுபானங்கள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றையும் மீட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று மாம்பழச்சந்தியில் மாவட்ட குற்ற விசாணைப்பிரிவு சப் இன்பெக'டர் ரி. மேனன் தலைமையிலான பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது யாழ்.நகர் பகுதியிலிருந்து அரியாலை நோக்கி பிரயாணித்த குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் மதுபானங்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து மதுபானங்களை கடத்திச்சென்ற ஒருவரை கைது செய்ததுடன், அதிலிருந்து 300 மதுபானப் போத்தல்களையும் கடத்தலுக்கு உபயோகிக்கப்பட்ட முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு யாழ்.பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் ,இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri