அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கியை வைத்திருந்தவர் கைது
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெவசிறிகம பகுதியைச் சேர்ந்த 40 வயது கந்தே கெதர சமிந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் இந்தத் துப்பாக்கியை மான் வேட்டைக்குப் பயன்படுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சின்னக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியும், ஒரு தோட்டாவுமே கைப்பற்றப்பட்டுள்ளது.
கந்தளாய் தலைமை பொலிஸ் பரிசோதகர் எல்.எம். சஞ்சீவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri