யுவதியுடன் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகத்தில் பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றையதினம் (17.11.2023) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகத்தில் குளிர்பான நிலையம் நடாத்தி வரும் 45 வயது நபர், குளிர்பான நிலையத்தில் கடமையாற்றும் 19 வயது யுவதியுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபருக்கு விளக்கமறியல்
இவர் தவறான காணொளிகளையும் தொலைபேசி மூலமாக குறித்த பெண்ணுக்கு அனுப்பி தொல்லை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய Al-Shifa வைத்தியசாலையும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகின்ற ஹமாசின் நிலக்கீழ் தளங்களும் (Video)
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த யுவதி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam