புத்தளத்தில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடிய நபர் கைது
புத்தளம் (Puttalam) பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி மூலம் விலங்குகளை வேட்டையாடி விற்பனை மோசடியில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய இன்று (18.06.2024) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவ 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத செயல்
குறித்த சந்தேக நபர் சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும்
ரவைகளை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
