சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது - பொலிஸார் தீவிர சோதனை
மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) இடம்பெற்றுள்ளது.
1800 லீற்றர் கோடா பறிமுதல்
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்த 1800 லீற்றர் கோடா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் இன்று(05.08.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
