நுவரெலியாவில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்டவர் கைது
நுவரெலிய மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரி நுவான் மதுசங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பொகவந்தலாவ டின்சின் தோட்டத்திற்கு செல்லும் நடைபாதைக்கு அருகில் உள்ள தேயிலை மலைப்பகுதியில் குழி தோண்டி , இரத்தினக்கற்கள் அடங்கிய மண்ணை சந்தேக நபர் வீட்டிற்கு கொண்டு சென்று குறித்த மண்ணை கழுவிக் கொண்டிருந்ததாகவும், அதன்போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஹட்டன் நீதவான் நீதிமன்றம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்....](https://cdn.ibcstack.com/article/106c411c-228c-4499-aa72-84b1d87e118e/25-6793a77ca4fe1-md.webp)