அம்பாறையில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
அம்பாறை- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22) இரவு பெரியநீலாவணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சுமார் 700 க்கும் அதிகமான போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைதானார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்து வந்தவர் என தெரிய வந்துள்ளது.
மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
