யாழில் எண்ணெய் நிறுவனத்தில் நடந்த பாரிய மோசடி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
யாழ்ப்பாணத்தில், சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்களை மொத்தமாக விநியோகித்து வரும் ஸ்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றிய ஒருவர், தனது பதவியை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் மேற்கொண்ட உள்ளக விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், சந்தேகநபரின் வசிப்பிடத்திலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள், போலியான ஆவணங்கள் மற்றும் பல வணிக நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி முத்திரைகளும் (Rubber Stamp) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்த பணியாளர் கைது
இந்த சம்பவத்தால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி அவர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட விநியோகஸ்தாபனம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஏற்பட்ட நிதி இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam