யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது
யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி காணாமல் போயிருந்தார். இது குறித்து பெற்றோர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
குறித்த சிறுமி யாழ்ப்பாணத்தில் இருந்த ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்றையதினம்(09) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
இதன்போது, ஹொட்டலில் இருந்தவர் சிறுமியை தவறான முறையில் துன்புறுத்தியதும், சிறுமியின் காதலன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
