வவுனியாவில் 3 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயற்சித்த நபர் கைது
வவுனியாவில் (Vavuniya) 3 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (23.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா - மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு செல்கின்றார்.
மருத்துவ பரிசோதனை
இதன் காரணமாக, தாயார் கூலி வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளைகளை அயலில் உள்ள வீட்டில் விட்டுச் செல்வது வழமையாக இருந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு விட்டுச் சென்ற 3 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, வவுனியா பொலிஸில் தாயாரால் செய்யப்பட்ட முறைபாட்டுக்கு அமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
