ஏறாவூரில் வர்த்தகர் ஒருவரிடம் காசோலை மோசடி செய்த நபர் கைது
மட்டக்களப்பு- ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலட்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(8) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பிரதேசத்தில் முந்திரிகை பருப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் முதலாளி ஒருவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் திகதி ஒன்று இடப்பட்டு 11 இலச்சம் ரூபா காசோலை ஒன்றை வழங்கி அந்த தொகைக்கான முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துள்ளார்.
மோசடி
இந்த நிலையில் குறித்த திகதியில் முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்தவர் வழங்கிய காசோலையை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளவதற்காக வங்கிக்கு சென்று காசோலையை வழங்கிய போது அந்த காசோலைக்கான பணம் வங்கில் வைப்பில் இல்லாததையடுத்து காசோலை திரும்பியது.
இதனையடுத்து திரும்பிய காசோலைக்கான பணத்தை குறித்த நபரிடம் தொடர்பு கொண்டு வாங்க முயற்சித்தபோதும் அது முடியாததையடுத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் காசோலை மோசடி தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தார்.
பிணை
இச் சம்பவம் தொடர்பாக காசோலையை வழங்கிய நபரை திங்கட்கிழமை (07) ஏறாவூரில் வைத்து கைது செய்து ஏறாவூர் சுற்றலா நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திபோது அவர் குற்றத்தை ஒப்பு கொண்டு அதற்கான பணத்தை வழங்குவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கிற்கான திகதியிடப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு அவரை பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்து பிணையில் விடுவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
