பிரான்சிலுள்ள ஈரான் தூதரகம் அருகே வெடிகுண்டு மிரட்டல்
பிரான்சிலுள்ள(France) ஈரான் தூதரகம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் பாரிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் தூதரகத்திற்குள் கையெறி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் கூடிய ஜாக்கெட் அணிந்த ஒருவர் இன்று (19.04.2024) காலை 11 மணியளவில் நுழைந்துள்ளார்.
பிரான்சில் பரபரப்பு
இந்நிலையில் அவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து, இந்த விடயம் தெரிந்தவுடன், ஈரான் துணைத் தூதரகத்தைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதோடு, அவர் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்றாரா? அல்லது வேறு காரணத்திற்காக இப்படி நடந்து கொண்டாரா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவத்தை அடுத்து ஈரான் தூதரகம் பகுதியில் உள்ள இரண்டு மெட்ரோ பாதைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் நடந்த இந்த சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |