பொலிஸாரின் துப்பாக்கியை பிடுங்கி அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் அதிரடி கைது
கட்டுநாயக்கவின் கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் (15) மினுவாங்கொடவின் தேவோலபோல பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலை புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்
அதிகாரியின் துப்பாக்கி
போதைப்பொருள் கடத்தல்காரரான அந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துவர ஒரு அதிகாரி சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தன்னுடன் இருந்த அதிகாரியின் பணித் துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan