யாழில் வீடொன்றை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார்: வசமாக சிக்கிய நபர்
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம்
பகுதியில் நேற்றைய தினம் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான குறித்த சந்தேகநபர் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் திடீரென மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்று 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 102 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கஞ்சாவுடன் மோட்டார்சைக்கிளில் பயணித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும், ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri