மாலியி்ல் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து கோர விபத்து: 31 பேர் பலி - செய்திகளின் தொகுப்பு
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி நாட்டில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவமானது மாலியின் கெனிபியா பகுதியில் நேற்று(27.02.2024) மாலை 5 மணியளவில் இடம்பெற்றள்ளது.
இதன்போது பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கெனிபியா பகுதியில் உள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் விபத்து தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |