மலேசியாவின் பினாங்கில் பல கட்டுப்பாடுகள்: துணை முதல்வர் ராமசாமி எதிர்ப்பு
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாநிலத்தின் துணை முதல்வர் பி இராமசாமி (Ramasamy Palanisamy) குற்றம் சுமத்தியுள்ளார்.
மாநில அரசாங்கம், சூதாட்ட வளாகங்களைத் தடை செய்து, மாநிலத்தில் மது விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது மாநிலத்தில், முஸ்லிமல்லாதவர்களைக் கட்டுப்படுத்தி, அவர்களின் உரிமைகளை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையாகும் என்று ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலேசியா ஒரு மதச்சார்பற்ற அரசியலமைப்பைக் கொண்ட மதச்சார்பற்ற நாடு. இங்கு முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று எவரும் கூறுவார்கள்.
எனினும், பல ஆண்டுகளாக நுட்பமான மற்றும் அப்பட்டமான இஸ்லாமிய மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்துடன், நல்லது கெட்டது எது என்பதை முஸ்லிம்கள் அல்லாதோரே தீர்மானிக்கட்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.



