கொழும்பில் மர்மமாக உயிரிழந்த நபர் - பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு - சஹஸ்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) சஹஸ்புர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்க, 5 அடி 4 அங்குலம் உயரமுடைய, நரைத்த தலைமுடியைக் கொண்ட ஒருவர் எனவும், அவர் இறக்கும் போது கருப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.