இந்தியாவின் மோதலினால் பொருளாதார வீழ்ச்சியடைந்த மாலைத்தீவு : செய்திகளின் தொகுப்பு
இந்தியாவுடன் மோதலினால் மாலைத்தீவின் பொருளாதாரம் திவாலடைந்துள்ளதாகவும் இதனால் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடாக மாலைத்தீவு உள்ளது. தீவு தேசமான இந்த நாட்டின் வருமானம் என்பது சுற்றுலாத்துறையை சார்ந்தே இருக்கிறது.
பிரதமர் மோடி சமீபத்தில் லட்சதீவுக்கு சென்று புகைப்படம் வெளியிட்டார்.மாலைத்தீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ஆதரிப்பதாக அந்நாட்டு அமைச்சர்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்தனர்.
இது இந்தியா-மாலைத்தீவு இடையேயான பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தியது. இதனால் கடும் கோபமடைந்த இந்தியர்கள் மாலைத்தீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இரத்து செய்தனர்.
இதனால் மாலைத்தீவின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளுடன் வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு