மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் விபத்து: பத்து பேர் உயிரிழப்பு
மலேசியாவின் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானம் தரையிறங்குவதற்கு 2 நிமிடங்களுக்கு முன் கட்டுப்பாட்டை இழந்து, எல்மினா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி தீப்பிடித்துள்ளது.
இதில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்களும், விமானத்தில் பயணித்த 8 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Rakaman pesawat terhempas di #Elmina, Shah Alam yang diambil dari "dashcam’ kereta orang awam.
— BERNAMA RADIO (@Bernama_Radio) August 17, 2023
? Awampic.twitter.com/LV1lcYCdKc
லங்கா விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.08 மணிக்கு புறப்பட்ட அந்தத் தனியார் விமானம், சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தை நோக்கிச் சென்றபோது விமான நிலையத்தை நெருங்கும் வேளையில் விபத்தில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
