யாழில் மலையகம் 200 நிகழ்வுகள் ஆரம்பம்(Video)
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிகழ்வு இன்றைய தினம் (23.06.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் ஆரம்பமானது.
மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின்
கலைவெளிப்பாடுகளாக "புறக்கணிக்கப்பட்ட மலைகள்" என்ற தலைப்பில் கிசோகுமாரின்
புகைப்பட கண்காட்சியும், "தேயிலை சாயம்", எனும் தலைப்பில் மாற்றுக்
கொள்கைகளுக்கான நிலையத்தின் புகைப்பட கண்காட்சியும் ஜுன் 23 தொடக்கம்
ஜுன் 25 வரை, யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம்
இரவு 7 மணி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
200 ஆண்டுகள் நிறைவு
மேலும் யாழ்ப்பாணம் 286, பிரதான வீதி, அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் ஜுன் 25 மாலை 3 மணிக்கு டிக்கோயா நுண்கலைக் கல்லூரி வழங்கும் நாட்டியநாடகம் மற்றும் பொதுக்கூட்டம் என்பனவும் இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




