மல்யுத்தம் - யூடோவில் மல்லாவி மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை
முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி விளையாட்டு துறையின் வரலாற்றில் முதற்தடவையாக மல்யுத்தம் மற்றும் யூடோ போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் 2026 மே 19, 20 ஆம் திகதிகளில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (Wrestling) மற்றும் ஜூடோ (Judo) போட்டிகளில் மு/மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் திறமையாக பங்கேற்று 10 தங்கப் பதக்கங்கள், 07 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 23 பதக்கங்களை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வரலாற்றுச் சாதனை
மேலும் மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் வட மாகாண பாடசாலைகளில் பெண் பிரிவில் மு/மல்லாவி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இந்த வெற்றிக்காக மாணவர்களுக்கு கல்லூரி சமூகம் சார்பில் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மல்யுத்தப் பயிற்சிகளை முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுநரும், தேசிய மட்டத்தில் பதக்கங்களை உருவாக்கிய வரலாறு ஆசிரியருமான பு. ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.
அதேவேளை, யூடோ பயிற்சிகளை முன்னாள் தேசிய யூடோ பயிற்றுநர் ஜெயவர்த்தன வழங்கியிருந்தார்.