மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி சுவரொட்டிகள்
கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான போத்தல்களுக்கான பாதுகாப்பு சுவரொட்டிகள், இந்தியாவில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தகவல், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த ஆடம்பர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்று தயாரிக்கப்பட்டு லேபிள் மற்றும் பாதுகாப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், உற்பத்தி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடு - ஈ.பி.டி.பி மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
கைது
இந்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவரை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போலி மதுபானங்கள் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாண மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 25 மதுபான விற்பனை நிலையங்களுக்கு இந்த போலி மதுபானங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரும், மதுபானங்களை ஏற்றிச் சென்ற லொறியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள்
எத்தனால் மற்றும் 'பிரிடெக்ஸ்' எனப்படும் இரசாயனப் பொருளை வழங்கியதாகக் கூறப்படும் வத்தளை பகுதியைச் சேர்ந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்திற்கு சில கலால் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan