நாம் கேட்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கூட ஆராயப்படவில்லை! வடக்கில் தமிழர்கள் ஆதங்கம் (Video)
எமது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வேண்டும் என நாங்கள் கேட்கிற போதும், அந்த விடயம் ஆராயப்படவில்லை என வடக்கில் தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தமிழ் மக்களுக்கு எந்தளவிற்கு தீர்வினை கொடுக்கப் போகிறார்கள் என்பதும் தெரியாது என கூறியுள்ளனர்.
தமிழர்களுக்கான தீர்வு தொடர்பில் லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு கூறும் போதே பலரும் இவ்வாறு தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சரத் வீரசேகர சொல்லியிருக்கிறார் தமிழ் மக்கள் நினைக்கின்ற தீர்வுத் திட்டங்களை வழங்க முடியாது என்று. இப்படியான கருத்துக்கள் வருவது உண்மையில் அச்சமாக இருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து நிம்மதியாக இருப்போமா என்பது தெரியாது.
வேறு வேறு வகையில் எமது மக்களை அழிப்பதற்கான சதித்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறதே ஒழிய இந்த நாட்டில் தமிழ் மக்கள் சரியான அங்கீகாரத்துடன் வாழ்வதற்கான செயற்பாடு இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |