ரணிலை ஜனாதிபதியாக்கியே தீருவோம்! மகிந்தவின் சகாவான லொஹான் ரத்வத்த சபதம்
மகிந்த ராஜபக்சவின் வலது கை என்ற போதிலும் நாட்டின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் பக்கம் தற்போது நிற்கின்றேன் என்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அவருக்கே வாக்களிப்பேன் என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பண்டாரநாயக்க எனது மாமா, சிறிமா எனது அத்தை, சந்திரிகா எனது அக்கா, ஜெனரல் ரத்வத்த எனது தந்தை. இவ்வாறு அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்தே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
எனவே, ஜே.வி.பியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம். பேய்களுக்கு பயமெனில் சுடுகாட்டில் வீடு கட்டமாட்டோம் என்பதை அனுரகுமார திசாநாயக்கவுக்குக் கூறிவைக்க விரும்புகின்றோம்.
ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும்போது கை நடுங்கியது. ஆனால், அந்த முடிவு சரியென்பது இன்று உறுதியாகியுள்ளது. அது மகிழ்ச்சியளிக்கின்றது.
எனவே, அடுத்த தேர்தலிலும் நான் ரணில் பக்கம்தான் நிற்பேன். ரணிலை ஜனாதிபதியாக்கியே தீருவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
