மாகந்துரே மதுசும் 80 அரசியல்வாதிகளும்..! உண்மைகள் வெளியாகும் முன் நடந்த சம்பவம்
பாதாள உலகக் குழு உறுப்பினரான மாகந்துரே மதுஷ் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, மதுஷ் கொல்லப்பட்ட நாளன்று அவரை மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகளிடம் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, மாளிகாவத்தை பகுதியில் வைத்து மாகந்துரே மதுஷ் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மதுஷ் வழங்கிய தகவலுக்கமைய போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போதே இந்தச்சம்பவம் இடம்பெற்றது.
குறித்த படுகொலை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு மாகந்துரே மதுஷின் சகோதரர் ஒருவர் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை அடுத்து, பொலிஸ் மா அதிபரினால் இந்த விவகாரம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கொல்லப்படுவதற்கு முன்னதாக மாகந்துரே மதுஷ் தன்னிடம் 80 அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி.....
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam