யாழ்.மாவட்டத்தில் எரிப்பொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்(Photo)

Jaffna Sri Lanka Economic Crisis Angajan Ramanathan Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 20, 2022 12:48 PM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விசேட கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

விசேட கலந்துரையாடல்

அதன்படி, யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தமது பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படுவதுடன் நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தினமும் காலை, இரவு என இரண்டு தடவைகள் நேரடியாக சேகரிக்கப்படும்.

யாழ்.மாவட்டத்தில் எரிப்பொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்(Photo) | Major Decisions Fuel Distribution Jaffna District

இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் இணங்கியுள்ளது.

வாகனங்களுக்கான பங்கீட்டு அட்டை முறை ஜூலை 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும் வகையில் பொறிமுறை உருவாக்கப்படும்.

தீர்மானங்கள்

யாழ்.மாவட்டத்தில் எரிப்பொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்(Photo) | Major Decisions Fuel Distribution Jaffna District

அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து பதிவு செய்யும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அரச உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்களிடம் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

சுகாதார சேவையினருக்கான எரிபொருள் விநியோகத்துக்கு தனியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பிரதேச செயலக எல்லைகளுக்குள் அமைந்துள்ள ப.நோ.கூ.ச எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை வழங்குமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் எரிப்பொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்(Photo) | Major Decisions Fuel Distribution Jaffna District

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US