அக்குரனையில் பல வாகனங்கள் மோதுண்ட கோர விபத்து! சாரதி கைது
புதிய இணைப்பு
அக்குறணையில் இன்று(19.10.2026) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே, அலவத்துகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கிறீட் கலவை வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டிகள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் எட்டு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அத்துடன், இச்சம்பவத்தின் போது வீதியில் நடந்து சென்ற பாதசாரிகளும் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அக்குறணைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் இணைப்பு
கண்டி - அக்குரணை, குருகொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளதாக அக்குரணை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
கண்டி - அக்குரணை, குருகொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அக்குரணை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
கண்டி - அக்குரணை, குருகொடை பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வாகனங்கள் மோதுண்டு இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், இந்த விபத்தில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மேலும், இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனம் ஒன்று உள்ளிட்ட பல வாகனங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.
அத்துடன், இந்த விபத்து காரணமாக, கண்டி - மாத்தளைக்கு இடையிலான வீதியின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்...
காணொளியை காண இங்கே அழுத்தவும்.. இதயம் பலவீனமானவர்கள் காணொளியை தவிர்க்கவும்




