அமைச்சுப் பதவி குறித்த செய்தி - மைத்திரி தெரிவித்துள்ள விடயம்
அமைச்சுப் பதவி குறித்து வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், தாம் அமைச்சுப் பதவி எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் மைத்திரியும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.
தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவி வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.