குடும்ப அரசியலை விரிவுப்படுத்தும் மைத்திரி! - மகனுக்கு பதவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் (Maithripala Sirisena) தனது குடும்ப அரசியலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தனது மகன் தஹாம் சிறிசேனவை (Daham Sirisena) கட்சியின் முக்கிய பதவிக்கு மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவராக அவரது தஹாம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவரும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் தஹாம் சிறிசேன இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பதவிக்கும் தஹாம் சிறிசேன தெரிவுசெய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அரசியலுக்கு கொண்டு வரவில்லை என்று பலமுறை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எனினும் தற்போது அவரின் மகனை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
