மைத்திரியை தண்டிக்க வேண்டும் - நிலைப்பாட்டில் மாற்றமில்லை:பிரசன்ன ரணதுங்க
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Rantunga) தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எங்கிருந்தாலும் எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கியே ஆக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவங்கொடை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.
அவர்கள் தற்போது அரசாங்கத்தில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போது இருக்கும் இடத்திற்கு அமைய அந்த குற்றத்தின் பாரதூரத்தில் மாற்றம் ஏற்படாது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கடந்த அரசாங்கம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள், அதனை பொறுப்பேற்க வேண்டியவர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் பொறுப்பை ஏற்கவேண்டும். அறிந்தோ அறியாமலோ அந்த தகவல்களை மறைத்து தாக்குதல் நடக்க இடமளித்தமை குற்றம்.
தாக்குதலின் பின்னர், அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் பிரச்சினைகள், நாடாளுமன்றத்தில் தனது தரப்பினரை பயன்படுத்தி சம்பவத்தை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளை நான் எதிர்த்தேன்.
தற்போதும் எதிர்க்கின்றேன். நான் இதனை பயங்கரமாக கூறினே். குற்றவியல் விசாரணை திணைக்களம் என்னை அழைத்தாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் செயற்பட வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri