தவறுக்காக இழப்பீட்டை முழுமையாக செலுத்திய மைத்திரி
ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி முடித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபருக்கு மன்னிப்பு வழங்கிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டையே, சிறிசேன முழுமையாக செலுத்தி முடித்துள்ளதாக. அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மனுதாரருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீடு
முன்னதாக, ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஜெயமஹாவை மன்னித்து சிறிசேன பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரத்து செய்து, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்தது.
ஏனவே, பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன, மனுதாரருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில்; சுவீடன்; நாட்டைச் சேர்ந்த யுவோன் ஜோன்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
