சீன கப்பலுக்கு ஒரு சதமேனும் கொடுக்கக் கூடாது! மைத்திரி அதிரடி (Video)
இலங்கையில் இன்று பாரியளவில் டொலர் நெருக்கடி நிலவுகின்றபோது சீனாவின் பசளைகள் கப்பலுக்கு ஒரு சதமேனும் வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறப்பு கூட்டம் ஒன்றி்ன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவை செலுத்துவதற்கு பதிலாக இந்த கப்பலை இலங்கைக்கு வரவழைத்தது யார் என்பதை கண்டறிந்து அவருக்கு தண்டனை வழங்கவேண்டும்.
அத்துடன் அவரிடம் இருந்து பெற்று குறித்த கப்பலுக்கான கட்டணத்தை செலுத்தவேண்டும் என்றும் மைத்ரிபால குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் லிற்றோ நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
அதன் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் பதவி விலகியிருக்கவேண்டும். அல்லது பதவிகளில் இருந்து விலக்கப்பட்டிருக்கவேண்டும்.
எரிவாயு கொள்கலன்களின் கலவை மாற்றத்தை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவேண்டும் எனினும் எதுவும் இடம்பெறவில்லை என்று மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தினார்.







தேசிய விருது வாங்கிய ஜி.வி. பிரகாஷிற்கு, ஏ.ஆர். ரகுமான் கொடுத்த விலையுயர்ந்த பரிசு... போட்டோ இதோ Cineulagam
