கப்பல்களில் இருந்து நிலக்கரியை இறக்குவதில் ஏற்படும் கால தாமதம்: நாளந்தம் 60000 டொலர் நட்டம்
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரியைச் சுமந்து வந்த இரண்டு கப்பல்கள், அவற்றை இறக்க முடியாமல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சட்டத்தரணி மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் நாளொன்றுக்கு 60,000 அமெரிக்க டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
கடல் கொந்தளிப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்தக் கப்பல்களில் உள்ள நிலக்கரி இருப்புகளை இறக்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால், நாட்டின் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயம் பெருமளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சென்றுகொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இதுபோன்ற தேவையற்ற தாமதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருப்பது கடுமையானதொரு பிரச்சினையாகும் என தெரிவித்துள்ளார்.
முறையான திட்டமிடல் இன்றி அதிகாரிகள் செயற்படுவதன் விளைவாக, இறுதியில் இந்த நஷ்டம் அனைத்தும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களின் தலையிலேயே சுமத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொதுமக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவதைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி மைத்திரி குணரட்ன மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 17 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam