முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தொடர்பாக மைத்திரி எடுத்துள்ள முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கட்சியின் அங்கத்துவத்தை இரத்துச் செய்ய எந்த சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவு தொடர்பான தகவலை அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க வெளியிட்டுள்ளார்.
கட்சிக்கு எதிராக செயற்பட்டாலும் சந்திரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் மட்டுமல்லாது அந்த கட்சியின் ஆலோசகர் என்பதால், அவரது கட்சி அங்கத்துவத்தை இரத்துச் செய்யவோ அல்லது வேறு நடவடிக்கைகளை எடுக்கவோ போவதில்லை என மைத்திரிபால சிறிசேன உறுதியாக கூறியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக செயற்பட்டாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர்களால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் அத்தனகல்ல தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் கிளை சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அலுவலகத்தில் இருந்து ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதி வரை அவர்கள் பேரணியாக சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
