சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த பிரதான அரசியல் கட்சிகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
நேற்றய தினம் (26.01.2023) இந்த சர்வக்கட்சி கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் என்பன கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஜனாதிபதியின் அழைப்பு
அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் சபை, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன சர்வக்கட்சி கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அரச ஆதரவு கட்சிகளின்
பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri