வாகனத்தோடு சேர்த்து கொழுத்திவிடுவேன்: பிக்கு ஆவேசம் (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை, சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த பிரதேசத்திற்கு சென்ற பல்சமய தலைவர்களையும் ஊடகவியாளர்களையும் பெரும்பான்மையினத்தை சேர்ந்த பிக்கு உள்ளிட்ட குழுவினர் சிறைப்பிடித்திருந்தனர்.
இதுதொடர்பில் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல்சமய தலைவர்கள் சம்பவம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தனர்.
மேலும், குறித்த பிக்கு உங்களை வாகனத்தில் வைத்து தீயிட வேண்டும் எனவும், வாகனத்தினுடைய சாவியை பறித்தெடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குறித்த ஊடக சந்திப்பில் பல்சமய தலைவர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




