கிண்ணியா நகர சபையை ஆளப்போவது யார்! நாளை கன்னி அமர்வு
கிண்ணியா நகர சபையின் கன்னி அமர்வு நாளை (17) நடைபெறவுள்ளது.
இதன் போது, இந்த சபைக்கு தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
15 உறுப்பினர்களைக் கொண்ட, கிண்ணியா நகர சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான அருதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளவில்லை.
கன்னி அமர்வு
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், பெற்றுக்கொண்டன.

பொதுசன ஐக்கிய முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், கிண்ணியா நகர சபையின், ஆட்சி அதிகாரம் 4 ஆசனங்களை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி வசமாகுமா அல்லது அதே ஆசனங்களை பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகுமா அல்லது 3 ஆசனங்களை பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம் ஆட்சி அதிகாரம் செல்லுமா என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri