மகிந்தவின் மந்திர கோலால் மயங்காத ரணில்! மந்திரவாதிகள் வழங்கிய சக்தி
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்த போது, மந்திர கோல் ஒன்று வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் மீது அதீத நம்பிக்கை கொண்ட ராஜபக்சர்கள், கடந்த ஆட்சிகளின் போது கேரளா மந்திரவாதிகளிடம் வசியம் செய்யும் மந்திர மோதிரங்களை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
அதீத சக்திகளை கொண்ட தங்க மோதிரம் மற்றும் சிறிய தங்க கோல் ஒன்றையும் மகிந்த எப்போதும் தன்வசம் வைத்திருப்பார். அதன்மூலம் தனக்கு சாதகமான நிலைப்பாடுகளை எட்டுவதற்கு அதன் தாக்கம் செலுத்தியதாக பரவலாக பேசப்பட்டது.
மந்திர கோல்
இந்நிலையில் காலில் சிகிச்சை செய்து கொண்ட மகிந்த ராஜபக்சவை, கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

இதன்போது மகிந்த அணிந்திருந்த மந்திர கோல் என அழைக்கப்படும் மோதிரம் ஒன்று ரணிலுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது.
எனினும் மாந்திரீகம் மீது நம்பிக்கை கொள்ளாத ரணில், குறித்த மந்திர கோலை தனது அலுவலக அறையிலுள்ள மேசையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்சர்களின் ஆட்சியின் போது இந்தியாவின் கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிரபல மாந்திரீகர்களால் பாரிய யாகங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வதிகாரமா..! அ. யோதிலிங்கம் 3 நிமிடங்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam