தேர்தல்கள் ஆணைக்குழுவை விமர்சித்த மகிந்தானந்த அளுத்கமகே
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை (Mujibur Rahman) தேசிய பட்டியல் மூலம் நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள வேட்பாளர் எவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல்
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேசியப் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு மௌனமாக உள்ளது

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam