மஹிந்தானந்தவின் நீதிமன்ற விவகாரம்: எதிர்வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவு
மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்துள்ள முன்பிணை மனு தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் தனூஜா லக்மாலி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று(15.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
ஆட்சேப சமர்ப்பணங்கள்
அதன்படி, இந்தக் கோரிக்கை தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆட்சேப சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதவான் தனுஜா லக்மாலி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
