பதுங்கு குழியில் தலைமறைவான மகிந்த மீண்டும் வெளியில் வந்தார்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியில் வந்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் நோக்கில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக அவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மஹிந்த

இதேவேளை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்ந்தவர்களுடனான கலந்துரையாடலிலும் மகிந்த பங்கேற்றுள்ளார்.
மகிந்த உட்பட ராஜபக்ஷர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவே உள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒன்பதாம் திகதி நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார்.
இதனையடுத்து ராஜபக்சர்கள் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.