மகிந்தவுக்கு அவசர சத்திர சிகிச்சை : அவரின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவரது இடது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சத்திர சிகிச்சை
இதன்போது இடது காலில் சிரட்டையை அகற்றி புதிய சிரட்டை வைப்பதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
தற்போது மகிந்தவின் வலது காலில் உள்ள சிரட்டையை அகற்றி புதிய சிரட்டையை பொருத்தும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள்
சத்திர சிகிச்சையின் பின்னர் மகிந்த தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட பல அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி முன்னாள் ஜனாதிபதியின் நலம் விசாரிப்பதற்காக அவரின் வீட்டிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
