எல்லாத்துக்குமே காரணம் மகிந்த அண்ணா தான்: உதயங்கவின் பிறந்தநாளும் பின்னணியும்
இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்றையதினம்(24.3.2026) தனது பிறந்த தினத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கொண்டாடி இருந்தார்.
டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து சட்டநடவடிக்கைகளுக்காக இலங்கையிலிருந்து சென்ற குழு உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் உதயங்க வீரதுங்கவுக்கு சாதகமாகவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.
காரணம் என்னவென்றால் அவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினராவர்.இதனால் அவருக்கு மகிந்தவிடமிருந்து நிறைய உதவிகள் கிடைக்கப்பெற்றன.
அத்தோடு, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று தீர்மானங்களை எடுப்பதற்கு பிரதான வழிகாட்டியாக இருந்தவர் மகிந்த தான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி....