விசாரணை வலையில் சிக்கிய மகிந்த : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி அவர்கள் ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவுக்கு வழங்கப்பட்ட 60 மில்லியன் ரூபா
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் ஏ-330 மற்றும் ஏ-350 விமானங்களையும் கொள்வனவு செய்த போது, அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நி ஆகியோர் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

இலஞ்சச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஒரு விசாரணையின் தொடர்பில், சந்தேக நபரான கபில சந்திரசேன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேக நபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2015ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, சந்தேக நபர் தனது பெலியத்த இல்லம் மற்றும் காரல்டன் இல்லத்தில் வைத்து, தலா 20 மில்லியன் ரூபா வீதம் மூன்று சந்தர்ப்பங்களில் மகிந்த ராஜப்க்சவுக்கு 60 மில்லியன் ரூபாவை வழங்கியதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரை எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri