உலக உணவு திட்டத்தின் தலைவர் இலங்கை விஜயம்: மகிந்த சமரசிங்க
உரம் மற்றும் பிற விவசாய உள்ளீடுகள் போன்ற உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உலக உணவு திட்டத்துடன் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பத்துடன் இருப்பதை உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லியிடம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மகிந்த சமரசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மகிந்த சமரசிங்க உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லியை நேற்று முந்தினம் வோஷிங்டனில் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர் மேற்கொள்ளவுள்ள இலங்கை விஜயம் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
மேலும், தாம் மேற்கொள்ளவுள்ள இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை வெகுவாக எதிர்பார்த்துள்ளதாக உலக உணவுத்திட்ட தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! பெரும்பாலானோர் மொட்டு கட்சியினர் - வெளியானது முழு விபரம் |