மகிந்தவின் ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர் விரட்டியடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கம்பஹா பகுதியில் உள்ள தியான மையத்திற்கு பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
எனினும், அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவை உள்ளே அனுமதிக்கவில்லை.
உள்ளூர்வாசிகள் குழுவிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் அங்கு சென்றிருந்தார்.
அமைச்சர் விரட்டியடிப்பு
கம்பஹாவின் யகோடா பகுதியில் இந்த தியான நிலையம் அமைந்துள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரதியமைச்சர் ஈடுபட்டுள்ளார்.
மகிந்த தரப்பின் செயற்பாடு குறித்து அந்தப் பகுதி மக்கள் ஆளும் தரப்புக்கு முறைப்பாடு செய்த நிலையில், அது குறித்து ஆராயம் நோக்குடன் பிரதியமைச்சர் அங்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்டுகிறது.
எனினும் மகிந்த தரப்பினரால் அவருக்கு உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |