ஒரே நேரத்தில் ஏழு பௌத்த பிக்குகள் பலி! மகிந்தவின் உருக்கமான பதிவு
குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பௌத்த துறவிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,''நேற்று நடந்த இந்த துயர சம்பவத்தைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
துயர சம்பவ
அந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துறவிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் வெளிநாட்டு துறவிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா நாடுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பசுமையான மற்றும் அமைதியான சூழலில் தியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மறைந்த புத்த மகான்கள் தங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய நான் பிராத்திக்கிறேன்.
இதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பௌத்த துறவிகள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.






ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
