மகிந்தவுக்கு வந்த அழைப்பு : அரசுக்கு பதிலடிக் கொடுக்க தயாராக இருப்பதாக ராஜபக்சக்கள் சவால்
“ஏர்பஸ் ஒப்பந்தம்” தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமிருந்து இலஞ்ச ஆணைக்குழுவிற்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது தகவலோ வரவில்லை என அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அவருடைய சட்டத்தரணி வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்
மேலும், தற்போதைய ஜனாதிபதி எதிர்கால நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே தீர்மானிப்பது நீதித்துறைக்கு ஒரு அவமதிப்பு என்றும், நீதிபதிகளின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்தும் முயற்சி என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழு ராஜபக்சக்கள் மீது தீவிரமாகப் பணியாற்றி வந்தாலும், நிலக்கரி மோசடி, கொள்கலன் பரிவர்த்தனைகள் மற்றும் டொலர் மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் விசாரணைகளைத் தொடங்காமல் இருப்பது ஒரு பிரச்சினை என்று சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தியுள்ளார்.
இலஞ்ச ஆணைக்குழு ஆட்சியாளர்களின் பணத்தில் அல்ல, பொதுமக்களின் வரிப் பணத்தில் தான் செயல்படுகிறது என்றும், அரசியல் வேட்டைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் மற்ற பெரிய அளவிலான மோசடிகள் குறித்து அது சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச தரப்பு இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு அஞ்சவில்லை என்றும், தேவைப்பட்டால் சட்டப்படி பதிலடி கொடுக்கும் என்றும் இதன்போது எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri