அரசுக்கு எதிரான நுகேகொடை பேரணியில் மகிந்த, ரணிலை களமிறக்க தீவிர முயற்சி
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான மக்கள் பேரணியில் முக்கிய அரசியல் புள்ளிகளைக் களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜக்ச மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை களமிறக்குவதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பங்கேற்றாலும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.

பேரணியில் முக்கியத்துவம்
இந்நிலையிலேயே கூட்டத்தில் உரையாற்றாவிட்டாலும், வந்து அமர்ந்திருக்குமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நுகேகொடை பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதால் அந்தப் பேரணியில் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும், மேற்படி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan