போரை முடிவிற்கு கொண்டு வந்தது மகிந்தவே: மக்கள் செல்வாக்கு குறையாது - சந்திரசேன பெருமிதம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் போரை முடிவுக்கு கொண்டுவந்தார், எனவே அவரை சில அரசியல்வாதிகள் கிழட்டு மைனா என விமர்சித்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு - மதிப்பு குறையவே இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களாக உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிரணியில் உள்ளது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறினாலும், அவரின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
இதன்மூலம் அவர்களின் இரட்டைக்கொள்கை அரசியல் தெளிவாகின்றது. மகிந்த ராஜபக்சவுடன் இணையப் போவதில்லை எனவும் மைத்திரி கருத்து வெளியிட்டுள்ளார்.
மகிந்தவுடன் இணைந்து போட்டியிட்டதால் தான் அவருக்கு நாடாளுமன்றம் வரமுடிந்தது என்பதை மறந்துவிட்டார் போலும்.
போரை முடிவிற்கு கொண்டு வந்த மகிந்த
மகிந்த ராஜபக்ச இந்நாட்டுக்காக பொறுப்புகளை நிறைவேற்றிய தலைவர். 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.
பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்தார். இப்படியானவர் எமது கட்சி தலைவராக இருப்பது பெருமை அளிக்கின்றது.
மகிந்தவுக்கான மதிப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதனை எவரும் ஒளிக்க முடியாது. மைனா, திருடன் என ஜே.வி.பிக்காரர்கள் விமர்சித்தாலும், நாட்டை மீட்டது யார் என்பது மக்களுக்குத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
